சட்டவிரோதமாக பல துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்ததாக மினுவாங்கொடையில் “காஸ்மா” என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் 45 வயதான சந்திம ஜயரத்ன என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விமான சேவைகள் நிறுவனத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்றும் தற்போது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, இன்று (15) அதிகாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது, ஒரு T-56 துப்பாக்கி, 14 ரவைகள், கைத்துப்பாக்கி, 6 ரவைகள், 9 ரவுண்டு தோட்டாக்கள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் போன்றன மீட்கப்பட்டன.
No comments:
Post a Comment