அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (15) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படுமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, 1,421,745 பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ரூ.11,275,973,750.00 (ரூ. 11,276 மில்லியன்) வங்கிகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று முதல் தனக்கான பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment