முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேக செயலாளர்களுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் இரத்தாகவுள்ளதுடன், அவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் இரத்து செய்யப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் தொடர்பாக எவரும் ஆட்சேபனைகள் தெரிவிக்காவிடின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இச்சட்டமூலம் மீதான இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புகள் இடம்பெற்று நிறைவேற்றப்படும்.
எவரும் நீதிமன்றம் சென்றால் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்று வாரங்கள் காலத்தாமதமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment