பிரபலமாக பேசப்பட்டு வந்த வர்த்தகர் திலிணி பிரியமாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவிதத குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திலிணி பிரியமாலி, வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றஞ்சாட்டுகள் தொடர்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment