பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்தல் மற்றும் கணக்கறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மேற்படி விடயம் தொடர்பாக அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களின் பதவிக் காலம் முடிவடைந்தவர்களும் குறிப்பாக விஷேட நம்பிக்கையாளர்களின் பதவிக் காலம் முடிவடைந்தவர்களும் மிக விரைவாக புதிய நிருவாகத் தெரிவை தெரிவு செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதுடன் வக்ப் சட்ட நடைமுறைகளைப் பேணியும் பள்ளிவாசல்களின் யாப்பைப் பேணியும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதிய நிருவாகத் தெரிவை செய்வதற்கு தயாராகும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் அப்பிரதேச கள உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வருடாந்த கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்காத பள்ளிவாசல்கள், சமர்ப்பிக்காத வருடங்கள் அனைத்திற்கும் தனித்தனியாக திணைக்கள வலையத்தளத்தில் (Web : w.w.w.muslimaffairs.gov.lk) இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment