கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் செயற்பட்டுவரும் விலங்கறுமனையை (Slaughter House) 23.07.2025 (புதன்கிழமை) தவிசாளர் எம்.எச்.எம். பைரூஸ் நேரில் சென்று பார்வையிடப்பட்டதோடு, விலங்கறுமனையின் தற்போதைய இயங்குநிலை, கட்டுமான வசதிகள், சுகாதார வழிமுறைகள் மற்றும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதன்போது விலங்கறுமனையில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை கேட்டறிந்த தவிசாளர், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் சபையின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உணவுக்காக அறுவைக்கு கொண்டுவரப்படும் விலங்குகளின் தன்மை, அவற்றின் சுகாதாரம் மற்றும் அறுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள் என்பவற்றை விலங்கறுமனையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீராக கண்காணிக்க வேண்டும் என இதன்போது தவிசாளரால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விலங்குறுமனையில் காணப்படும் பயன்படுத்தப்படாத, சேதமடைந்த, பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் காணப்படும் கட்டடங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை உடனடியாக இடித்து அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், விலங்கறுமனையில் நீண்ட நாட்களாக காணப்படும் குடிநீர் வசதியின்மைக்கான தீர்வை தான் பெற்றுத்தருவதாக தவிசாளர் உறுதியளித்திருந்தார்.
விலங்கறுமனையின் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகள் என்பவை முறையாக கடைப்பிடிக்கப்படுமானால் பிரதேச சபையூடாக மிகச்சிறந்த முன்மாதிராயான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும் எனவும் தவிசாளர் இதன் போது கருத்துத் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment