உதவி பொலிஸ் பரிசோதகர் (SI) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 1 இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment