‘அஸ்வெசும’ நலன்புரி சபை தலைவர் இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Sunday, July 20, 2025

‘அஸ்வெசும’ நலன்புரி சபை தலைவர் இராஜினாமா

‘அஸ்வெசும’ நலன்புரி உதவிகள் சபையின் தலைவர், ஜெயந்த விஜேரத்ன தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தை நிதி அமைச்சிடம் அவர் கையளித்துள்ளார்.

‘அஸ்வெசும’ நலன்புரி உதவிகள் சபையின் தலைவராக இவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் விசேட தர அதிகாரியான ஜெயந்த விஜேரத்னவுக்கு அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசுக்கு அமைய கடந்த 2023.08.24 ஆம் திகதி இப்பதவி வழங்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் இதற்கான கடிதத்தை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி உதவிகள் சட்டத்தின் பிரிவு 4 (2) இன் பிரகாரம், அரசியலமைப்பு சபையுடன் கலந்தாலோசித்த பிறகு இந்நியமனம் நிதி அமைச்சரால் வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment