பலஸ்தீன விவகாரத்தில் மௌனம் காத்துவருவது இஸ்ரேலின் இன அழிப்பை ஆதரிப்பதற்கு சமம் : எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

பலஸ்தீன விவகாரத்தில் மௌனம் காத்துவருவது இஸ்ரேலின் இன அழிப்பை ஆதரிப்பதற்கு சமம் : எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

ஆக்­கி­ர­மிப்பு இஸ்ரேல் இரா­ணுவம் பலஸ்­தீனில் மேற்­கொண்­டு­வரும் இன அழிப்­புக்கு எதி­ராக நாங்கள் தொடர்ந்தும் மெளனம் காத்துவருவதானது அங்கு இடம்­பெறும் அநி­யா­யங்­களுக்கு ஆதரவளிப்­பது போன்­றதாகும். அதனால் எங்­களால் முடிந்தவகையில் எமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த முன்­வர வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரி­வித்தார்.

உலகளாவிய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பின் ஏற்­பாட்டில் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் எழு­திய பலஸ்தீன், சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் மஹிந்த ஹத்தக எழு­திய காஸா இனப் படு­கொலை மற்றும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லத்தீப் பாருக் எழு­திய பலஸ்­தீ­னத்­திற்கு கண்ணீர் இல்லை என்ற நூல்­களின் வெளி­யீட்டு விழா கொழும்பு லக்ஷ்மன் கதிர்­காமர் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்­தினம் (01) இடம்­பெற்­றது. இதில் தான் எழு­திய பலஸ்தீன் நூலை வெளி­யிட்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், ஆக்­கி­ர­மிப்பு இஸ்ரேல் இரா­ணுவம் பலஸ்­தீனில் மேற்­கொண்­டு­வரும் படு­கொ­லை­க­ளில் நாள்­தோறும் நூற்­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள் மர­ணிக்­கின்­றனர். இவர்களில் சிறு­வர்­களும் பெண்­க­ளுமே அதி­க­மாக கொலை செய்யப்­ப­டு­கின்­றனர். 

தற்­போது இறுதி ஆயு­த­மாக இனப் ­ப­டு­கொ­லையை ஆரம்பித்துள்ளனர். அந்த மக்­க­ளுக்­கான உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்­தி­யா­வ­சிய பொருட்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இஸ்ரேலின் இந்த இனப் ­ப­டு­கொ­லைக்கு எதி­ராக இன்று ஐரோப்­பிய நாடுகள். ஸ்பைன், ஜேர்மன், அயர்­லாந்து என அதி­க­மான நாடுகள் அணி­ தி­ரள ஆரம்­பித்­துள்­ளன.

ஐக்­கிய நாடுகள் சபை உரு­வாக்­கப்­பட்டு 80 வரு­டங்கள் ஆகின்­றன. எம்­மைப்­போன்ற சிறிய நாடு­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டாமல் உலகில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே ஐ.நா. உரு­வாக்­கப்­பட்­டது. அதேபோன்று சட்­டத்தை பாது­காக்க சர்­வ­தேச நீதி­மன்றம் இருக்கிறது. சிறு­வர்­க­ளுக்கு கல்­வியை உறு­திப்­ப­டுத்த யுனிசெப் அமைப்பு இருக்­கி­றது. மனித உரிமை ஆணைக்­குழு ஒன்று இருக்கிறது. இவை அனைத்தும் ஒரே­ஒரு (வீட்டோ பவ­ரினால்) உயர் அதி­கா­ரத்­தினால் இன்று செய­லி­ழக்­கப்­பட்­டுள்­ளன. 

உலக நாடுகள் அனைத்தும் இன்று ஒரு பக்­கத்தில் இருக்­கும்­போது விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சில நாடுகள் மாத்­திரம் உயர் அதிகாரத்தின் உத­வி­யுடன் இதனை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இன்று மனித உரிமை, பேச்சு சுதந்­திரம், ஜன­நா­யகம் என்­பன வெற்று வார்த்­தை­க­ளாக்­கப்­பட்­டுள்­ளன. மனித உரி­மைக்கு எதி­ராக குரல் கொ­டுக்க முடி­யாதநிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு எதி­ராக ஆர்ப்பாட்டம் செய்தால் ஹவாட் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழகம் தடை செய்­யப்­ப­டு­கி­றது. வெளிநாட்டு மாணவர்கள் அவர்­களின் நாடு­க­ளுக்கு நாடு கடத்தப்படு ­கின்­றனர். பேச்சு சுதந்­தி­ரம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் நாங்கள் மெளனமாக இருக்கக்கூடாது, இந்த பேரழிவுகளுக்கு முன்னால் தொடர்ந்தும் நாங்கள் வாய் மூடி மெளனமாக இருந்தால், அந்த இன அழிப்பு படுகொலைகளுக்கு நாங்களும் உதவுவது போன்றாகிவிடும் என்றார்.

No comments:

Post a Comment