மாலைதீவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார - News View

About Us

About Us

Breaking

Friday, July 25, 2025

மாலைதீவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர். 

No comments:

Post a Comment