இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்கு புதிய அலுவலர் குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்கு புதிய அலுவலர் குழு நியமனம்

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவராக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவும், உப தலைவராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை மாதம் 29 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றபோதே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கல்வி, அறிவியல், கலாசாரம், வெகுஜனத் தொடர்பாடல், சமூகவியல் மற்றும் சுற்றாடல் ஆகிய முக்கிய துறைகளில் யுனெஸ்கோ அமைப்பின் இலக்குகளுக்கமைய, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தொடர்புடைய அனைத்து அமைச்சுகளு ளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும். 

புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களில், துறைசார் நிபுணர்களான கலாநிதி ஆஷா டி வோஸ், திருமதி சந்திரா விக்கிரமசிங்க, கலாநிதி டீ.பி.மெதவத்தகெதர, சுவாமிநாதன் விமல் ஆகியோருடன் யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க மற்றும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி நதீகா ரத்நாயக்க ஆகியோர் அடங்குவர். 

மேலும், ஹேமந்த புபுதுசிறி, திருமதி சசிகலா பிரேமவர்தன, திருமதி சமந்தி சேனநாயக, அப்சரா கல்தேரா, மொஹமட் நவாஸ், ஆர்.ஏ.டி.எஸ். ரணதுங்க, டபிள்யூ.ஜி. குமாரகம, சுஜீவ பல்லியகுருகே, திருமதி தீபா லியனகே, எச்.ஏ.எச். பெரேரா, எஸ்.எஸ்.பி. டி அல்விஸ், வருண ஸ்ரீ தனபால, டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பளம்கும்புர, எம்.எஸ்.எல்.ஆர்.பி. மாரசிங்க, கலாநிதி நிலான் குரே மற்றும் சனுஜா கஸ்தூரியாரச்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment