துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டால் கடுமையான சட்ட நடவடிக்கை : பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 24, 2025

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டால் கடுமையான சட்ட நடவடிக்கை : பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர்

யானைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்துமாறும் இவ்வாறான சம்பவங்களை விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறும் கோரி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

சிகிரியா, திகம்பத்தன மற்றும் கல்கமுவ பகுதிகளில் நான்கு காட்டு யானைகள் இறந்து கிடந்தமை குறித்து விசாரணை நடத்தக்கோரி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். 

காட்டு யானைகளுக்கு எதிரான இந்த கொடூர நிலைமைகள் நீண்ட காலமாக தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த யானைகள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்வோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆம் திகதிக்குள், வனவிலங்கு பிரிவு கால்நடை மருத்துவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான 09 யானைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஜூலை 15 ஆம் திகதிக்குள், அந்த எண்ணிக்கை 13 ஆகவும் ஜூலை 22 ஆம் திகதி, அது 21 ஆகவும் உயர்ந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்..

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒற்றுக்கொண்று தொடர்புபட்டவை என்றும், யானைகளின் கால்களின் கீழ் பகுதியில், முழங்கால்களுக்கு கீழே காயங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்த அமைச்சர், யானைகள் உயிரிழப்பது தொடர்பான இரண்டு போக்குகளை சுட்டிக்காட்டினார். 

யானை இறப்புகளின் முதல் கட்டம், பட்ஜெட் காலங்களில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செலவுகள் குறித்த விவாதங்களுடன் ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டார்.

வேட்டைக்காரர்கள், விவசாயிகள் அல்லது சட்டவிரோத துப்பாக்கி வைத்திருப்பவர்களால் யானைகள் சுடப்படுவது குறித்தும் அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment