கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள் : ஒன்று உயிரிழப்பு, மற்றையது மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, July 25, 2025

கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள் : ஒன்று உயிரிழப்பு, மற்றையது மீட்பு

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் 2 யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிஸாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தி இருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment