நாளை வங்கிக் கணக்குகளில் ஜூலை மாத கொடுப்பனவுகள் : 6 இலட்சத்து 768 பயனாளிகளுக்கு ரூ. 3004 மில்லியன் ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 29, 2025

நாளை வங்கிக் கணக்குகளில் ஜூலை மாத கொடுப்பனவுகள் : 6 இலட்சத்து 768 பயனாளிகளுக்கு ரூ. 3004 மில்லியன் ஒதுக்கீடு

முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை 30ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

6 இலட்சத்து 768 பயனாளிகளுக்காக, ரூ. 3004 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நிவாரணத் தொகை பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment