யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜாவின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் (15) கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பேண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலையின் சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கல்வித் திணைக்களத்தின் சங்கீத ஆசிரிய ஆலோசகர், கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழையமாணவர் சங்கத்தினர், மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினர், பாடசாலை முன்னாள் அதிபர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த மாணவி அண்மையில் வெளியிடப்பட்ட 2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நிருபர் - பு. கஜிந்தன்
No comments:
Post a Comment