ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் : டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 21, 2025

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் : டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

ஈரானின் மூன்று அணு உலைகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களான போர்டோவ் (Fordow), நதான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) மீது அமெரிக்க இராணுவம் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அவர் தனது சமூக ஊடகப் பதிவில், "அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான் பரப்பை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மை தளமான போர்டோவ் மீது முழு அளவிலான குண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பி வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபோர்டோ ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி உற்பத்தி தளமாக கருதப்படுகிறது. இது மலைப்பகுதியில் ஆழமாக அமைந்துள்ளதால், தாக்குதல் நடத்துவது மிகவும் சவாலானது. ட்ரம்ப், இந்த தளத்தின் மீது "முழு அளவிலான குண்டுகள்" வீசப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் 2025ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 22ஆம் திகதி  நடைபெற்றதாகவும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்பி வருவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

தாக்குதலின் துல்லியமான நேரம் அல்லது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் வகைகள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

"உலகில் வேறு எந்த இராணுவத்தாலும் இதை செய்ய முடியாது," என்று ட்ரம்ப் பெருமையுடன் கூறி, அமெரிக்க இராணுவ வீரர்களை பாராட்டியுள்ளார்.

இதுவரை ஈரானின் உத்தியோகபூர்வ பதில்கள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில், ஈரான் ஆதரவு குழுக்கள் இந்த தாக்குதலை கண்டித்து, பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்க படைகள் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment