விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹல்லொலுவ இன்று (20) காலை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, தலா ரூ. 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், அவருக்கு பயணத் தடையும் விதித்துள்ளது.
தேசிய லொத்தர் சபையிக்கு சொந்தமான அரசாங்க சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment