இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் - News View

About Us

Add+Banner

Tuesday, June 17, 2025

demo-image

இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

GtorZxSa0AcMktK
இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்து விடுமோ என்கிற அச்சத்தில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

இந்த தாக்குதல்களினால் இரு தரப்பிலும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குத் குறித்து இஸ்ரேலிய தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை.

மேலும், ஈரான் தரப்பில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும், இது இதற்கு முந்தைய தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் வலுவான தாக்குதலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் மத்திய கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளிலும் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *