கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம் : பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தர - News View

About Us

Add+Banner

Breaking

  

Saturday, June 14, 2025

demo-image

கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம் : பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தர

506668151_1231320335032664_2226938685789195782_n%20(Medium)%20(1)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் 'சரோஜா' திட்டத்தை ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது.

இதன்போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்களே ஆகும்.

இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.

ஒரு சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே தவறான நடத்தைக்கு உள்ளாக முதல் பாதுகாப்பதுதான் சிறந்தது. அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பார் அல்லது தாய், தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு பிரச்சினைகள் உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த 'சரோஜா' திட்டம். எனவே மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *