பேஸ்புக் மூலம் ஆண்களை ஏமாற்றி போலியான காதல் உறவுகளை ஏற்படுத்தி பணம் பறித்து வந்த கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் மூலம் ஆண்களை ஆசை காட்டி அநுராதரபுரம், மிஹிந்தலை காட்டுப் பகுதிக்கு வரவழைத்துச் சென்று அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கி மோட்டார் சைக்கிள், பணம் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடித்த திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்களால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்களுடனும் இவர்களை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் அசோகபுர ,விஜயபுர, கெக்கிராவை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும் 21, 27, 32 வயதுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான பெண் குறித்த ஆண்களை நேரில் சந்திக்க வருமாறு கூறி அவர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களின் உதவியுடன் ஆண்களை தாக்கி அவர்களிடமுள்ள பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment