ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான, தவறான கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு - News View

About Us

Add+Banner

Monday, May 5, 2025

demo-image

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான, தவறான கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு

1653323727-1653293383-1653292885-cid_L
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி கருத்துக்கள், ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், துசித ஹல்லொலுவ மற்றும் அந்தக் கருத்துக்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப நடவடிக்கை எடுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவரின் சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *