பல்கலைக்கழக மாணவன் மரணம் : 4 பேருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, May 5, 2025

பல்கலைக்கழக மாணவன் மரணம் : 4 பேருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக பொறியியல் தொழிநுட்ப பீடத்தின் மாணவன் சரித் தில்ஷானின் தற்கொலைக்கு காரணம் இப்பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவர்கள் பலர் இவர் மீது நடத்திய பகிடிவதையே என செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு இணங்க 3ஆம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவனின் தற்கொலைக்கு இவர் மீது இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கீழ்த்தரமான பகிடிவதையே காரணம் என இவரது பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களால் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் விசாரணை நடாத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment