பகிடிவதையால் மனமுடைந்த பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 1, 2025

பகிடிவதையால் மனமுடைந்த பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு

பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த 2 வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment