உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நாளை ஆரம்பம் : இலங்கையிலிருந்து 60 பேராளர்கள் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நாளை ஆரம்பம் : இலங்கையிலிருந்து 60 பேராளர்கள் பங்கேற்பு

இஸ்­லா­மிய இலக்­கியக் கழ­கத்தின் பொன் விழாவும், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்­கிய ஒன்­ப­தா­வது மாநாடும், 9 ஆம் 10 ஆம் 11 ஆம் திக­தி­களில், இந்­தியா - தமிழ் நாடு, திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்­லூ­ரியில் நடை­பெற ஏற்­பா­டாகி உள்­ளன.

“இணைப்பே இலக்­கியம்” என்­பதே, இம்­மா­நாட்டின் சிறப்பு முழக்கமாகும்.

இம்­மா­நாட்­டிற்­கான ஏற்­பா­டுகள், இஸ்­லா­மிய இலக்­கியக் கழகத் தலைவர் பேரா­சி­ரியர் முனைவர் சேமுமு. முக­ம­தலி, பொதுச் செயலாளர் பேரா­சி­ரியர் முனைவர் மு.இ. அக­மது மரைக்­காயர், பொரு­ளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் உள்­ளிட்ட குழு­வி­னரால் மேற்கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் இருந்தும் மாநாட்டு இணைப்­பா­ளர்­க­ளாக பொறியியலாளர் நியாஸ் ஏ. சமத், டாக்டர் தாஸிம் அஹமத் ஆகியோர் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

தமி­ழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உத­ய­நிதி ஸ்டாலின், சட்­டப்­பே­ரவை சபா­நா­யகர், அமைச்­சர்கள், மூத்த அறிஞர்கள், அர­சியல் மற்றும் சமு­தாயத் தலை­வர்கள், உலமாப் பெருந்­த­கைகள், படைப்­பா­ளர்கள் முத­லான பலரும் பல்­வேறு நாடுகளி­லி­ருந்தும் மாநாட்டில் கலந்­து­கொள்ள அழைக்கப்பட்டிருக்கி­றார்கள்.

இலங்­கையில் இருந்தும் பிரதி சபா­நா­யகர் டாக்டர் றிஸ்வி சாலி, பிரதி­ய­மைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர், பாரா­ளு­மன்ற உறுப்பினர்­க­ளான முன்னாள் அமைச்­சர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், றிஷாத் பதி­யுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் நாயகம் நிஸாம் காரி­யப்பர் எம்.பி. ஆகி­யோரும் பங்கு கொண்டு சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இந்­தியா, மலே­சியா, சிங்­கப்பூர், ஓமான், குவைத், கட்டார், சவூதி அரேபியா உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் அதிக பேரா­ளர்கள் பங்­கு­பற்றும் இம்­மா­நாட்டில், இலங்­கையில் இருந்தும் சுமார் 60 பேராளர்கள் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

உல­கெங்­கி­லு­முள்ள இஸ்­லா­மியத் தமிழ் இலக்­கிய அறி­ஞர்கள், கல்வி­யா­ளர்கள், படைப்­பா­ளர்கள், இலக்­கிய ஆர்­வ­லர்கள் பற்­றிய விவரக் குறிப்­புக்­களும், ஒளிப்­ப­டங்­களும் அடங்­கிய “யார் – எவர்” எனும் நூல் மாநாட்டில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

மாநாட்டில் ஆய்­வ­ரங்கம், கருத்­த­ரங்கம், கவி­ய­ரங்கம், மார்க்க அறிஞர் அரங்கம், தீனிசை அரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வுக் கோவை, மாநாட்டுச் சிறப்பு மலர், இலக்­கியக் கழக நூல்கள் முதலியனவும் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

மாநாட்டின் தொடக்க விழா, நாளை (09) வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் நான்கு மணிக்கு, இஸ்­லா­மிய இலக்­கியக் கழகத் தலைவர் பேராசிரியர் சேமுமு. முக­ம­தலி தலை­மையில் இடம்­பெறும்.

தமி­ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்நாள் நிகழ்வில் பிர­தம அதிதியாகப் பங்­கு­கொண்டு சிறப்­பு­ரை­யாற்றும் இம்­மா­நாட்டில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தொடக்­க­வு­ரை­யாற்­ற­வுள்ளார்.

தமி­ழக துணை முதல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் “ஒன்­ப­தா­வது மாநாட்டின் சிறப்பு மலர், ஆய்­வுக்­கோவை, யார் - எவர்” ஆகிய நூல்களை வெளி­யிட்டு வைக்­க­வுள்ளார்.

பேரா­சி­ரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர் தலை­மையில் 20 உலகக் கவி­ஞர்கள் குழு அடங்­கிய “சிறப்புக் கவி­ய­ரங்கம்” ஒன்றும் நடைபெற ஏற்­பா­டாகி உள்­ளது.

பேரா­சி­ரியர் முனைவர் பர்வீன் சுல்­தானா தலை­மையில் அரங்­கேறும் “மகளிர் அரங்கம்” நிகழ்வில் 150 பெண் ஆர்­வ­லர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சமு­தாயப் பாட­கர்கள் கலந்து கொள்ளும் “தீனி­சைத்­தென்றல் அரங்கம்” நிகழ்வில் 12 பிர­பல இஸ்­லா­மியப் பாட­கர்­களும் கலந்து, மக்­களை இன்­னிசை மழையில் நனைய வைக்­க­வுள்­ளனர்.

நீதி அரசர் ஜீ.எம். அக்பர் அலி தலை­மையில் இடம்­பெறும் இறுதி நாள் நிகழ்வில், “நூல்கள் வெளி­யிடல், விரு­துகள் வழங்கல்” முத­லான நிகழ்­வுகள் இடம்பெற­வுள்­ளன.

இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், “ஊடக அரங்கு” நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான நிகழ்ச்சி நிரல் ஒன்­றையும் நெறிப்­ப­டுத்த உள்ளார்.

இச்சிறப்பு மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு அறிஞர்கள், எழுத்தாளர்கள் 26 பேருக்கு, 20 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதி வாய்ந்த பொற்கிழிகளும், “இலக்கியச் சுடர்” விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு பாராட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment