நடுவானில் குலுங்கியதால் பலர் காயமடைந்ததை அடுத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) மினியாபோலிஸ் - செயின்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்திலிருந்து அந்நாட்டு நேரப்படி மாலை 4:30 மணிக்கு நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்ட இந்த விமானம் நாடுவானில் குலுங்கியதால் மினியாபோலிஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அங்கு அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் காயமடைந்திருந்த 25 பயணிகள் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விமானத்தில் 275 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 207 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் பலரும் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர் என அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டில் உலகளவில் புறப்படும் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான விமானங்களில், 5000 விமானங்கள் தீவிரமாக குலுங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்களில் 40 சதவீதமான காயங்கள் விமானம் குலுங்கியதால் ஏற்பட்டவை என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment