சர்ச்சைக்குரிய டேன் பிரியசாத் எனும் நபர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப அறிக்கையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்று (22) இரவு 9.10 மணியளவில் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியினால் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment