மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை ! - News View

About Us

About Us

Breaking

Monday, April 7, 2025

மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை !

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்டிடத் தொகு­தியின் ‘லொபி’ பகு­தியில் இரு ஸ்டிக்கர்­களை ஒட்டிய‌தாக கூறப்­படும் மொஹமட் ருஷ்டி  கடந்த 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டார். 

வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிரசாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை தடுத்து வைத்து விசா­ரித்து வருவதா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க தெரி­வித்திருந்தார்.

குறித்த இளைஞர், கொம்­ப­னித்­தெரு சிட்டி சென்டர் வர்த்­தக கட்­டிடத் தொகு­தியில் உள்ள கடை ஒன்றில் சேவை­யாற்றும் நிலை­யி­லேயே, பணி நிமித்தம் சென்றபோது அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டார். 

குறித்த கட்­டிடத் தொகு­தியின் லொபி பகு­தியில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்­கர்­களை ஒட்­டி­யுள்­ள­தா­கவும், காஸாவில் இடம்பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக அவர் அதனை செய்துள்ளதா­கவும் கூறப்­­பட்­டது.

இது குறித்து பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­களுக்கு அமைய, கொம்­ப­னித்­தெரு பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்டு, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டார். 

இந்நிலையிலேயே மொஹமட் ருஷ்டி இன்று திங்கட்கிழமை (07) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment