மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) மற்றும் இயன்முறை மருத்துவ பதவிக்கு (physiotherapist) பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை நேற்று (27) காலை நடைபெற்றது.
கொழும்பு தாதியர் கல்லூரி, கந்தானை தாதியர் கல்லூரி, கொழும்பு முதுகலை தாதியர் கல்லூரி, காசல் வீதி மகளிர் மருத்துவமனை ஆகிய நான்கு பரீட்சை மையங்களில் நடைபெற்ற இந்தப் போட்டிப் பரீட்சைக்கு 600 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) பதவிக்கு 294 விண்ணப்பதாரர்களையும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு 200 விண்ணப்பதாரர்களையும், நியமிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிப் பரீட்சையில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களை மே மாத இறுதிக்குள் உரிய பதவிக்கான கற்கை நெறிகளில் இணைக்க செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT) பதவிக்கு பட்டதாரிகள் கடைசியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு சுமார் 4 வருடங்கள் ஆவதோடு, இயன்முறை மருத்துவ (physiotherapist) பதவிக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன.
நேற்று இடம்ற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment