முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி : நீதிமன்றில் சாட்சியம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Monday, April 28, 2025

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொலை முயற்சி : நீதிமன்றில் சாட்சியம் பதிவு

மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் அவரிடம் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) சாட்சியம் பதிவு செய்தது.

பொரலஸ்கமுவ பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இம்பெற்ற குறித்த சந்தர்ப்பத்தில் விவசாய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் முதலாவது சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.

No comments:

Post a Comment