அட்டை கிடைக்காதவர்கள் தபால் நிலையத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 30, 2025

அட்டை கிடைக்காதவர்கள் தபால் நிலையத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளவும்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் தமது கடிதங்கள் வரும் தபால் நிலையத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதி செய்து அதைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 6ஆம் திகதி உள்ளுராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் நேற்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் மே 06ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை இந்த வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய 339 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மே 03ஆம் திகதி நள்ளிரவு நிறைவு பெறுவதுடன் அது முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment