உள்ளூராட்சி (LG) நிறுவனங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்களால் இந்த உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment