ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு புதிதாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அகிலவிராஜ் காரியவசம் நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வியமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம் பெற்றுள்ள மேற்படி நிகழ்வின் போது உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவில் உறுதிப்பாடு பெறப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment