கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் : பயணிக்கும் வாகனங்களில் அரச இலச்சினை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் : பயணிக்கும் வாகனங்களில் அரச இலச்சினை

வாகனம் திருட்டு மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேகநபர் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து ரூ. 16.5 மில்லியன் மதிப்புள்ள ஜீப் வகை வாகனமொன்றை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாகனமொன்றை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12.5 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பிலும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்க்கு அமைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் தேடி வருகின்றனர்.

ரபீக் மொஹமட் பாரிஸ் என அழைக்கப்படும் 48 வயதான குறித்த சந்தேகநபர், பல மொழிகளில் பேசத் தெரிந்தவர் எனவும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னத்தைப் பயன்படுத்தியவாறு வாகனங்களில் பயணிப்பவர் எனவும் விசாரணைகளில் தெரிய வந்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
கொழும்பு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி
0718591735

விசாரணைப் பிரிவு 5 பொறுப்பதிகாரி
0718596507

No comments:

Post a Comment