இ.போ.ச. முன்னாள் பிரதித் தலைவர் பிணையில் விடுதலை : ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு சொந்தமான வீடு தொடர்பில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 29, 2025

இ.போ.ச. முன்னாள் பிரதித் தலைவர் பிணையில் விடுதலை : ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு சொந்தமான வீடு தொடர்பில் கைது

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்னவை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு சொந்தமானதாகக் தெரிவிக்கப்படும் வீடு ஒன்று தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்படுத்திய சந்தேகநபரை பிணையில் செல்ல திஸ்ஸமஹாராம நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment