வங்கிக் கணக்குகளில் ஏப்ரல் கொடுப்பனவு : 1,737,141 குடும்பங்களுக்கு 12.63 பில்லியன் ரூபா நிதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 11, 2025

வங்கிக் கணக்குகளில் ஏப்ரல் கொடுப்பனவு : 1,737,141 குடும்பங்களுக்கு 12.63 பில்லியன் ரூபா நிதி

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று (11) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025 வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளும் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 1,737,141 குடும்பங்களுக்கு ரூ. 12.63 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட 580,944 முதியோர்க வங்கிக் கணக்குகளில் ரூ. 2.9 பில்லியன் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment