Youtube ஊடகவியலாளர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் : 15 வீத வரி விதிப்பின் ஊடாக அவர்களுக்கு கடனுதவி கிடைக்குமா? - எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

Youtube ஊடகவியலாளர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் : 15 வீத வரி விதிப்பின் ஊடாக அவர்களுக்கு கடனுதவி கிடைக்குமா? - எஸ்.எம். மரிக்கார்

Youtube ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களுக்கும் ஊடகத்துறை அமைச்சினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளை வழங்கி அந்த அங்கீகாரத்தை வழங்குமாறு அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

youtube ஊடகவியலாளர்கள் எந்தளவு வருமானத்தை சம்பாதித்தாலும் அவசர தேவையின்போது அவர்களுக்கு வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

அந்த வகையில் அரசாங்கம் விதித்துள்ள 15 வீத வரி விதிப்பின் ஊடாக அவர்களுக்கு கடனுதவி கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது என்றும் அவர் சபையில் தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணிக்காக 177 youtube சேனல்கள் 400 பேஸ்புக் பக்கங்களும் அவர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக தேர்தல் காலத்தில் செயற்பட்டன. 

எவ்வாறாயினும் தொழில் ரீதியாக அவர்களுக்கு மதிப்பு கிடைக்குமானால் அவர்களுக்கு 15 வீத வரி விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்த அவர் அவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) சுகாதாரம் மற்றும் ஊடகத்துறைக்கான வரவு செலவு திட்டத்தில் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment