2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளல் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து (www.election.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது அதற்குரிய தகவல்கள் 2024 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டும்.
2024 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேருநர் இடாப்புத் தகவல்களை பெற்றுக் கொள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கலாம்.
அது தவிர, மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள், உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்தும் 2024 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேருநர் இடாப்புத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment