வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, August 11, 2025

வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், அப்பகுதி இளைஞர்களை இராணுவ முகாமிற்குள் அழைத்து தாக்கியுள்ளதாகவும், அவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரை குளத்தில் இராணுவத்தினர் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டு இருப்பதனால் தான் அவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எனவே, வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவி பாரிய கடையடைப்பு போராட்டத்தை 15ஆம் திகதி நடாத்தவுள்ளோம்.

கடையடைப்பு போராட்டத்தினால், வர்த்தகர்களுக்கு பெருமளவான நஷ்டங்கள் ஏற்படும், மக்களின் இயல்வு வாழ்வு பாதிக்கப்படும். 

இருந்தாலும் நாம் இராணுவ பிரசன்னத்தினால் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதனால், அதற்கு எதிராக அன்றைய தினம் முன்னெடுப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment