சட்டவிரோத துப்பாக்கிகள், கைக் குண்டுகள் பற்றி தகவல்கள் வழங்கினால் சன்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 7, 2025

சட்டவிரோத துப்பாக்கிகள், கைக் குண்டுகள் பற்றி தகவல்கள் வழங்கினால் சன்மானம்

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டுகள் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில், பதிவான குற்றங்களைக் கருத்தில் கொண்டு, நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த பொலிஸ் சன்மானம் வழங்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment