பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேசபந்துக்கு வெளிநாடு செல்ல தடை : வீடுகளை சோதனை செய்த போதிலும் அவர் இல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேசபந்துக்கு வெளிநாடு செல்ல தடை : வீடுகளை சோதனை செய்த போதிலும் அவர் இல்லை

கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌிநாடு செல்வதை தடுத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசபந்து தென்னகோனின் ஹோகந்தர மற்றும் கிரியுல்ல வீடுகளை சோதனை செய்த போதிலும், அவர் அந்த வீடுகளில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment