வவுனியா சைவ உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

வவுனியா சைவ உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

வவுனியா, பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்டபோது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுததப்பட்டது.

தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும்கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment