நாட்டில் பெருங்குடல் புற்றுநோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

நாட்டில் பெருங்குடல் புற்றுநோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் பெருங்குடல் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தளவில் அதிகரித்து வரும் நிலையில், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பெருங்குடல் புற்றுநோயால் 1.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 900,000 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக குளோபோகன் 2022 சர்வதேச புற்றுநோய் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவிக்கையில், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தலாம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் 50 வயதிற்குப் பின்னர் நோயின் ஆபத்து அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பெருங்குடல் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் வசந்த விஜேநாயக்க தெரிவிக்கையில், 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3.5 மில்லியன் பேர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.

40 வயதிற்குப் பின்னர் 50 சதவீதமானவர்களுக்கு பெருங்குடல் அல்லது மலக்குடலில் பாலிப்கள் வளர்ச்சி அடைவதால் புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் எல்லா பாலிப்களும் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை. அவற்றில் சுமார் 4 சதவீதமானவை மட்டுமே புற்றுநோயாக மாறக்கூடும்.

புற்றுநோயாக மாறுவதற்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை செல்லும். எனவே ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டவற்றை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன், 23 ஆண்களில் ஒருவருக்கும் 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment