ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கில் சந்தேகநபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேகநபர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர்களை தலா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சான் குலத்துங்க ஆகியோர் ஆஜராகினர்.

அதேநேரம் களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு சார்பாக சட்டத்தரணிகளான பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் பிரசன்னமாகினர்.

ஹட்டன் நிருபர்

No comments:

Post a Comment