‘GovPay’ வசதி பெப்ரவரி 07 முதல் ஆரம்பம் : இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கலில் புதிய யுகம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2025

‘GovPay’ வசதி பெப்ரவரி 07 முதல் ஆரம்பம் : இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கலில் புதிய யுகம்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கிறது.

No comments:

Post a Comment