உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரை கிடைக்கவில்லை - சபைக்கு அறிவித்த சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரை கிடைக்கவில்லை - சபைக்கு அறிவித்த சபாநாயகர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரையில் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப் பெறவில்லை என்று சபாநாயகர் அறிவிக்கிறார்.

இது முற்றிலும் பாரதூரமானது. ஆகவே அமைச்சரவை பேச்சாளர் தனது கருத்தை மீறப் பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் யார் கூறுவதை ஏற்பது என கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கும் வரை பொறுமையுடன் இருங்கள். என் மீது நம்பிக்கை உள்ளதுதானே. ஆகவே நான் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (05) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது ஜனாதிபதியின் அறிவிப்பு, குழுக்களின் அறிவிப்புக்களை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

No comments:

Post a Comment