பஸ் சாரதி மீது வாள் வெட்டுத் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

பஸ் சாரதி மீது வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வால் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்திய போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி நிருபர் சப்தன்

No comments:

Post a Comment