முதல் பயணத்தை ஆரம்பித்த “எல்ல ஒடிஸி” ரயில் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

முதல் பயணத்தை ஆரம்பித்த “எல்ல ஒடிஸி” ரயில்

“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் இன்று (10) நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவை காரணமாக இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் 1.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment