ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிற்கும் இவ்வாறு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய,
பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன (டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்)
பதில் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர (பாதுகாப்பு பிரதி அமைச்சர்)
நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ (தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்)
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சசர் அருண் ஹேமசந்திர (வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்)
No comments:
Post a Comment