நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு ! நாளை முதல் கொள்வனவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2025

நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு ! நாளை முதல் கொள்வனவு

நெல்லுக்கான உத்தரவாத விலை புதன்கிழமை இன்று (05) அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சுடன் இணைந்த அரச நிறுவனங்கள் விவசாயிகள் நெல் கொள்வனவு செய்வதற்கான உத்தரவாத விலைகளை நிர்ணயித்துள்ளதாக விவசாய அமைச்சர் லால்காந்த அறிவித்துள்ளார்.

அதன்படி,
1kg நாட்டு நெல்லின் விலை :ரூ.120
1kg சம்பா நெல்லின் விலை : ரூ.125
1kg கீரி சம்பா நெல்லின் விலை : ரூ.132

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, புதிய தரத்தைக் கொண்ட உலர்ந்த நிறை கொண்ட நெல்லை மாத்திரம் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யுமென அவர் தெரிவித்தார்.

நாளை (06) முதல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment