சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார சமூக நலக் காப்பகத்தின மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 16.02.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
பிரபல எழுத்தாளர் கவிஞர் அல் அஸூமத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் பிரதம அதிதியாகவும், மையோண் நிறுவன பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா சிறப்பதிதியாகவும் கலந்துகொள்வார்கள்.
நூலின் முதற் பிரதியை யுனிவர்ஸல் ட்ரவல் கன்ஸல்டன்ஸி -அஜ்மா நிறுவனக் குழும பணிப்பாளர் அக்கீல் ஜூனைட் பெற்றுக் கொள்வார். இவர்களுடன் கௌரவ அதிதிகளாகவும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் நயவுரைகளை எழுத்தாளர்களும் மொழி பெயர்ப்பாளர்களுமான ஜிப்ரி ஹஸன் மற்றும் ஹேமச்சந்திர பத்திரண ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
அத்துடன் வாசகனின் வாசகங்கள் என்ற தலைப்பில் பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத் தலைவர் ரபீஸ் ஹம்ஸாவும், மொழி பெயர்ப்பும் மறுபடைப்பே என்ற தலைப்பில் கவிஞரும் பேச்சாளருமான தமிழ்த் தென்றல் எஸ்.எம். அலி அக்பரும் உரையாற்றவுள்ளனர்.
மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் ஏற்பாட்டினையும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் மேற்கொண்டு வருகிறார்.
நிகழ்ச்சிகளை ஆதவன் வானொலி அறிவிப்பாளர் முஸ்னி முர்ஷித் தொகுத்து வழங்குவார்.
No comments:
Post a Comment